அரசடித்தீவில் பேரணி

0
408

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களினால் பேரணியொன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு இப்பேரணி ஒழுங்கு செய்ப்பட்டு நடாத்தப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்டிருந்த மாணவர்கள், எழுத்தறிவின் முக்கியத்தும் தொடர்பான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
எழுத்தறிவை தொடராக விருத்தி செய்வோம் என்ற தொனிப்பொருளில், சகல பிள்ளைகளுக்கும் எழுத, வாசித்துப்பொருளறிய ஒவ்வொரு நொடியும் உதவி செய்வோம் என்பதனை நோக்காக கொண்டு இவ்வருட எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.