சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட புதிய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

0
562

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கரடியநாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடியநாறு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட நவீன முறையிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியநாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை(05) மேற்கொள்ளப்பட்ட, சுற்றிவளைப்பிலே இவ் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டவிரோதமான முறையில், குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களையும், அதற்கான உபகரணங்களையும் பொலிஸார் கடந்த காலங்களில் கைப்பற்றியிருந்தும், தற்போது கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்தடவையாக இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மின்சாரத்தினை பயன்படுத்தியே சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில், ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.