கி.ப.கழக பேரவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்திக்கிறது.

0
542

நிருவாகக் கட்டட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கிழக்குப் பல்கலைக்கழக பேரவையினர் நடத்தும் சந்திப்பு இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னரே கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து தெரியவரும் என்றும் தெரிகிறது.
மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து கிழக்குப்பல்கலைக்கழகத்தினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அதன் தலைவர் பல்கலைக்ழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹாக் டி சில்வா தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதில், கடந்த 8ஆம் திகதி முதல் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக்கட்டமான (செனற்) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களது பிரச்சினைகள் குறித்தும் பல்கலைக்கழகத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தொடர்பான எந்த விதமான விபரங்களும் பல்கலைக்கழக தரப்பிலிருந்து வெளிவரவோ அவற்றினைப் பெற்றுக் கொள்ளவோ முடியவிலலை.
இருந்தாலும், இன்றைய தினம் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஜொபர் சாதிக், இன்றைய தினம் மாலை மட்டக்களப்பில் பேரவை உறுபபினர்கள் மாணவர்களைச் செந்திக்கவுள்ளதாகவும் அதன் பின்னரே முடிவுகள் தெரயவரலாம் என்றும் தெரிவித்தார்.
சீசிரீவி கமராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப்  பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.