கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொன்னாச்சிகுல மக்களின் திருவிழா.

0
283

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8ம் நாள் திருவிழா நேற்று(31) இடம்பெற்றது.
பொன்னாச்சி குல மக்கள், இத்திருவிழாவிற்கான உபயத்தினை வழங்கியிருந்தனர். திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக அரசடித்தீவு இளங்கதிர் கலா மன்றத்தின் கலை நிகழ்வும் நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது, கடந்த 24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பானது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து ஆலய திருவிழாக்கள் 30ம் திகதி வரை நடைபெற்று. நேற்றிலிருந்து குடித்திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.