சித்தாண்டி முருகன் கோயிலில் திருவிளக்கு பூசை

0
109

வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்பு புகழ்பெற்றதும் வரலாற்று தொன்மைகொண்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ முருகனின் பெருவிழாவான ஆறாம் திருவிழாவாகிய நேற்றைய தினம் இடம்பெற்ற கண்காணிப்போடிக் குடித் திருவிழாவில் திருவிழக்குப் பூசை விசேடமாக இடம்பெற்றது.

சுமங்கலிப் பெண்கள், திருமணம் செய்துகொண்ட பெண்கள் என நூற்றுக் கணக்கான பெண்கள் ஆசார சீடர்களாக வருகைதந்ததுடன் இன்றைய தின கண்காணிப்போடி குடியினரின் சிறப்பான ஏற்பாட்டின்போது திருவிழக்குப் பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள் வீதி மற்றும் வெளி வீதியில் சப்புரத்தில் எம் பெருமானார் எழுந்தருளி இன்றைய தினம் பக்தர்களுக்கு அருள்வழங்கினார்.

இன்றைய தின கண்காணிப்போடி குடியினரின் திருவிழாவின் போது சுவாமி உள் வீதி மற்றும் வெளி வீதி வலம்வரும்போது திருவிழக்கு ஏந்திய பெண்கள், பக்தி கீர்த்தனைகள் பாடும் குழுவினர்கள், அலங்கரிக்கப்பட்ட சப்புரத்தில் எம்பெருமானர் வீதி உலாவருகின்ற வர்ண ஜல தீப்பந்தம் போன்ற சிறப்பம்சங்களும் இடம்பெற்றன.

ஆலயத்தின் கொடியேற்றம் செவ்வாய் கிழமை (22) ப்ரம்மோற்வ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எம்பெருமானர் மகோற்சவமானது உற்சவ காலங்களில் எதிர்வரும் அடுத்த மாதம் 03 திகதியில் இருந்து 05ம் திகதி வரையான உற்சவமானது இக்கோயிலின் தெய்வீக சிறப்பம்சத்தை பண்டைய காலம்தொட்டு இற்றைவரை போற்றி வழிபட்டு விழாவெடுக்கும் மயில்கட்டுத் திருவிழா உற்சவம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ சித்திர வேலாயுதரின் இறுதி நாள் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் செப்டம்பர் 06ம் திகதி புதன் கிழமை சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையின் பிரணவத் தீர்த்தத்துடன் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா நிறைவடையவுள்ளது.