பட்டதாரிகளுக்கு அடுத்த வாரம் அபிவிருத்தி உதவியாளர் நியமனம்

0
1495
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய 20 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
இவர்கள் பிரதேச செயலக அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். அரசாங்கத்தின் பொருளாதார வலய வேலைத்திட்டத்தை பிரதேசமட்டத்தில் அமுலாக்குவது நியமனம் பெறுவோரின் பிரதான பணியாக அமையும்.