(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை காலை 5.30மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்க செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
கொடியேற்றத்தினை தொடர்ந்து, ஆலயத்திருவிழா மற்றும் குடித்திருவிழா போன்றன இடம்பெற்று 10.09.2017ம் திகதி மாலை 04மணிக்கு தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும் மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
2000ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான தேரோடும் ஆலயமாகவும், கல்நந்தி புல்லுண்டு வெள்ளயரை துரத்திய அற்புதம் மற்றும் சுயம்பு லிங்கம் வீற்றிருக்கும் ஆலயமாகவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.