கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தில் மகா வேள்விக்கான வேலைகள் மும்முரம்.

0
1562

(படுவான் பாலகன்) உலக சுபீட்சத்திற்காகவும், இலங்கை வாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோச நிவர்த்திக்காகவும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நடைபெறவுள்ள வேள்வியை முன்னிட்டு அதற்கான வேலைகள், மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

முதன்முறையாக இலங்கை, இந்தியாவில் பல சித்த வனங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அ+பூர்வமான 10008 காயகல்ப மூலிகைகளை கொண்டு வேள்வி நடைபெறவுள்ளது.

வேள்வி இடம்பெறவிருக்கும் 17, 18ம் திகதிகளில் அன்னதானங்களும் வழங்கப்படவுள்ளன. இதற்கு உதவி செய்யக்கூடியவர்களும் ஆலய அன்னதானசபையினரை தொடர்பு கொண்டு வழங்கமுடியும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, ஈஸ்வர தலங்களில் ஒன்றான  கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இவ்வேள்வி நடைபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கொல்லிமலை சித்தர், மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள் சித்தமுறைப்படி இவ்வேள்வியை நடாத்தவுள்ளனர்.