வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள்

0
396

அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.,

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வினை, முன்னால் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னம்பலம் தலமைதாங்கி நடத்தியுள்ளார்.

இதன்போது, பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது

மேலும், குறித்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், மு.இராஜேஸ்வரன், இரா.துரைரெட்ணம் மற்றும் கல்முனை மாநகர முன்னால் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், நம்பிக்கை ஒளியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயசிறில், வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குவின் ஏற்பாட்டாளர் க.லவகுகராஜா, முன்னால் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னுத்துரை மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1990ம் ஆண்டு 8ஆம் மாதம் 12ம் திகதி அதாவது இன்றைய தினம் சம்மாந்துறை வீரமுனையின் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார்
ஆலய வளாகம் என்று கூட பார்க்காமல் விரட்டி விரட்டி பெண்கள் சிறுவர்கள்,கர்ப்பணிகள், முதியவர்கள் என்று கூட பாராது மிகவும் அகோரமான முறையில்  இவர்கள் தமிழர்கள் என்ற
காரணத்திற்காகவே கொன்று பிணமாக்கப்பட்டார்கள்.