தனது அலுவலகத்திலிருந்து கி.ப.கழக உபவேந்தர் வெளியேறினார்

0
1482

மட்டக்களப்பு – வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டதையடுத்து அலுவலகத்திற்குள்ளேயே கடந்த 4 நாட்களாக இருந்து வந்த உபவேந்தர் இன்றையதினம் வெளிறேயிதாகத் தெரிய வருகிறது..
மாணவர்கள் நிருவாகக்கட்டடத்தினை விட்டு வெளியேறும்வரை தான் வெளியேறப்பொவதில்லை எனத் தெரிவித்திருந்த உபவேந்தர் இன்றைய தினம் வரை மாணவர்கள் வெளியேறாத போதும் வெளியேறியுள்ளதாகத் தெரியவருகிறது.
மாணவர்களின் ஐந்து கோரிக்கைகளில் பிரதானமாக விடுதிப் பிரச்சினை மற்றும் வகுப்புத்தடை பிறப்பிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்புத் தடை நீக்குதல் தொடர்பான இரு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.
08ஆம் திகதி மதிய வேளை இது தொடர்பில் ஆர்ப்பட்டம் மேற்கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.
அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கி அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பத்தொன்பது பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்கள் இன்யை தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்கள் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை விட்டு வெளியேறும் வரை தாங்களும் வெளியேறுவதில்லை என பல்கலைக்கழக உபவேந்தர் பிரதி உபவேந்தர் உடபட நிர்வாகத் தரப்பினர் சிலர் பல்கலைக்கழத்தினுள்ளேயே தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.