கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம்

0
589

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம் எதிர்வரும் 13.08.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சிவமுன்றலில் தலைவர் – வண்ணக்கர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபை செயலாளர் வண்ணக்கர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
இதன்போது, யாகவேள்வி, தேரோட்ட மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாகவும், இதற்கு அனைத்து அடியார்களையும் கலந்துகொள்ளுமாறும் மேலும் குறிப்பிட்டார்.