உடற்கல்வி ஆசிரியர் இன்றியும், மண்டூர் 40ம் கொலனி மாணவன் சாதனை

0
402

மண்டூர் 40ஆம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினைச் சேர்ந்த மாணவன் ஒருவன், மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
குண்டுபோடுதல் போட்டியில், பரமேஸ்வரன் குகேந்திரன் என்ற மாணவனே இவ்வாறு முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இப்பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியர் இன்மையாக இருந்தும், இம்மாணவன் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற மாணவனை சந்தித்து, மாணவனுக்கான பயிற்றுவிப்பாளர் ஒருவரை தான் ஒழுங்குபடுத்தியுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டார்.