விசாரணைக்கு வழங்கிய தொலைபேசியின் தரவுத்தளத்தினுள் பிரவேசிக்க அர்ஜூன் அலோசியஸ் முயற்சி

0
191

அர்ஜூன் அலோசியஸ் தனது மனைவியின் தொலைபேசியைப் பயன்படுத்தி, விசாரணைகளுக்காக ஆணைக்குழுவிற்கு வழங்கிய தொலைபேசியின் தரவுத் தளத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று அறிவித்தது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர் திணைக்களம் இதனைத் தெரிவித்தது.

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவர் சார்பில் எவருக்கும் அந்த தொலைபேசியின் தரவுத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று ஆணைக்குழுவிடம் கோரியது.

இது தொடர்பில் ஆராய்ந்து நாளை (02) உத்தரவு பிறப்பிப்பதாக இதன்போது ஆணைக்குழு தெரிவித்தது.

அர்ஜூன் அலோசியஸ் பொய்யான கருத்துக்களைக் கூறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

விசாரணைக்கான சாட்சியங்களைப் பாதுகாப்பது முக முக்கியம் என இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.