கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சி தரத்திற்கு நியமனங்கள்

0
187

வடமாகாணம், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் வெற்றிடங்களுக்காக பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 56 பேருக்கான நியமனக் கடிதங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில வழங்கப்பட்டது.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.வாகீசன், முதலமைச்சரின் அமைச்சின் உதவிச் செயலாளர் பொ.ஸ்ரீவர்ணன், நிர்வாக உத்தியோகத்தர் ஜோ.லோறன்ஸ், ஐந்து மாவட்டங்களின் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.