இலங்கை விஜயத்தில் அதிகளவில் பெண் சுற்றுலாப் பயணிகள்

0
483

கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண்கள் இவ்வருடம் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுள் 54.7 சதவீதமானோர் அல்லது 1.12 மில்லியன் பெண் சுற்றுலாப் பயணிகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.