அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று

0
344
எஸ்.பாக்கியநாதன்
வரலாற்றுப்புகழ்மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்பு மிக்க இறந்த மூதாதையர்களின் ஆன்ம ஈடேற்றம் வேண்டிய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஆலய தீர்த்தக் குளத்தில் இடம்பெற்றது..

மூலஸ்தான பூஜை மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூஜை இடம்பெற்ற பின்பு பிள்ளையார், சிவன் மற்றும் சக்தி தெய்வங்கள் எழுந்தருளி தீர்த்தமாடியதும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீர்த்தமாடி நேர்கடன்களை நிறைவேற்றினர்.
தீர்த்தமாடுவதற்கு முன்பாக அடியார்கள் இழந்த மூதாதையர்களை நினைவு கூர்ந்து சிவாச்சரியார்களிடம் பிதுர்க்கடன் செலுத்தினர்