கிழக்கு மாகாண தமிழ்இலக்கியவிழா கல்முனையில்

0
225
காரைதீவு   சகா


கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தினால் வருடாந்தம்
நடாத்தப்பட்டுவரும் தமிழ்இலக்கிய விழா  கல்முனைமாகரில் எதிர்வரும்
31ஆம் திகதியும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் 2ஆம் திகதிகளில் நடாத்தப்படுமென
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்..

அது தொடர்பான முன்னேற்றக்கலந்தரையாடல் கூட்டமொன்று இன்று  வியாழக்கிழமை

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் மாகாண கலாசாரப்பணிப்பாளர் திருமதி
சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அதன்போது இம்முறை விருதுபெறும் கலைஞர்கள் பெயர்விபரங்களையும் அவர் அறிவித்தார்.
சிறந்த தமிழ் இலக்கிய நூல் பரிசுகளை 9பேரும்  கிழக்குமாகாண இளங்கலைஞர்
பாராட்டினை 10பேரும் கிழக்கு மாகாண வித்தகர் விருதபெறும் 10பேரினது பெயர்
விபரங்களை அமைச்சர் தண்டாயுதபாணி வாசித்து பிரகடனப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்
31ஆம் தகிதி காலை பாரிய பண்பாட்டுப்பபேரணியொன்று மருதமுனை அல்மனால் மகா
வித்தியாயலமுன்றலில் இருந்து ஆரம்பித்து கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை
வரை நடாத்தப்படவுள்ளது.
மேலும் ஆய்வரங்கு கவியரங்கு சிறப்புமலர் வெளியீடு மற்றும் விருது
வழங்கும் இறுதிநாள் விழாவும் கல்முனை மகுமூத் மகளரிர்கல்லூரி மற்றும்
உவெஸ்லிக்கல்லூரிகளில் நடைபெறும்.தமிழ்பேசும் இருஇனங்களின் பாரம்பரிய
கலாசார நிகழ்வுகள் அங்கு மேடையேறவுள்ளன. இவற்றுக்கான குழுக்கள் சிறப்பாக
ஒத்தழைக்கவேண்டுமென அன்பாகக்கேட்கின்றேன். என்றார்.

கூட்டத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்களான ஆர்.சுகிர்தராஜன்(திருக்கோவில்)
எம்.எஸ்.சஹதுல் நஜீம்(சம்மாந்துறை) எம்.எஸ்.ஜலீல்(கல்முனை) ஆகியோரும்
பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலாசார உத்தியோகத்தர்களும்
அதிபர்களும் கலைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண வித்தகர் விருதுக்கு தெரிவாகியுள்ளோர் விபரம்திருமதி கமலேஸ்வரி தவராஜரெட்ணம் (சாஸ்திரிய நடனத் துறைக்கு –பரதம்)

மாசிலாமணி கந்தசாமி (சிற்பத்துறைக்கு)

ஜனாப் காசி முஹம்மது முஹம்மத் பாறூக் (ஆக்க இலக்கியத் துறைக்கு)

கதிராமத்தம்பி மயில்வாகனம் (கூத்து, கிராமிய கலைத்துறைக்கு)

சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் (கலை இலக்கிய பல் துறைக்கு)

திருமதி தேவிகாராணி முருகுப்பிள்ளை (இசைத்துறைக்கு)

ஆதம்பாவா மீராகிபு (அசனார்) (இலக்கியத்துறைக்கு)

அப்துல் காதர் முகம்மது இப்ராஹீம் (இலக்கியத்துறைக்கு)

மாணிக்கம் வரதராஜா (இலக்கியத்துறைக்கு)

உதுமா லெப்பை முகம்மது அதீக் ( இலக்கியத்துறைக்கு)

சுப்பிரமணியம் அரசரெத்தினம் (இலக்கியத்துறைக்கு)

ஹாமிது லெப்பை அப்துல் குத்தூஸ் (கலை இலக்கிய பல் துறைக்கு)

இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் விபரம்

லக்ஸ்மன் சஞ்ஜித் (இசைத்துறைக்கு)

வெற்றிவேல் சசிகரன் (ஆக்க இலக்கியத்துறைக்கு)

கமால்தீன் நௌஷாத் (பாடலாக்கத் துறைக்கு)

மகேந்திரன் கேதீஸ்வரன் (கூத்து, கிராமியக்கலைத் துறைக்கு)

தங்கராசா ஜீவராஜ் (ஆவணமாக்கல் துறைக்கு)

தில்லைநாதன் பவித்ரன் (இலக்கியத் துறைக்கு)

திருமதி கலைமகள் சக்தீபன் (பரதத் துறைக்கு)

அகமது லெப்பை அன்ஸார் (கலை இலக்கிய பல்துறைக்கு)

பிர்தௌஸ் ஹஸன் அகமட் ஷpப்லி (ஆய்வுசார் செயற்பாடு துறைக்கு)

யோகேஸ்வரன் ஜகதாரினி (நடனத்துறைக்கு)

சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான பரிசு விபரம்

எம்.எம்.நௌஷாத் (சுயசிறுகதை –சொர்க்கபுரிச் சங்கதி)

சீ.கோபாலசிங்கம் (கவிக்கோ வெல்லவூர்க் கோபால்)- வரலாற்று நூல்மட்டக்களப்பு தேசம் வரலாறும் வழக்காறும்

பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா( பாடசாலை முகாமைத்துவம் – அறிவியலும் தொழில் நுட்பமும்)

ஜே.வஹாப்தீன் (சுயநாவல் -குலைமுறிசல்)

கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்( நானாவித நூல்-ஆயிரம்வேரும் அருமருந்தும் மருத்துவச் சுருக்கம்)

வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் (புலமைத்துவம் மற்றும் ஆய்வுசார் படைப்பு – கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்)

மூத்ததம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள –சமயநூல் இறையின்பப் பாவாரம்)

சோ.இராசேந்திரம் (தாமரைத்தீவான் -சுயகவிதை –பொன்னகம் மீட்போம்)

திருமதி இந்திராணி புஸ்பராஜா ( சிறுவர் இலக்கியம் – சிறுவர் பூங்கா)

ஆகியோர் கிழக்குமாகாண தமிழிலக்கிய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.