மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

0
129

ஈழத்தின் வரலாற்று புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புப்பைக் கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம்  வெள்ளிக்கிழமை (14.07.2017அம் திகதி) கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 

கொடியேற்றத்தையொட்டி ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால்  மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுடன் யாக பூசைகளும் இடம்பெற்றது.

தொடர்ந்து, உற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலைக்கான பூசைகள் கிரியைகள் நடைபெற்று நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றம் வைபவம் இடம்பெற்றது.

மாமாங்கேஸ்வரரின் மகோற்சவ கொடியேற்ற வைபவத்தில் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.