தேசிய தமிழ் மொழித்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில்

0
329
கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார். வட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது..

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும்¸தமிழர் சகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்களினதும் எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் தேசிய தமிழ் மொழித் தின விழா மலையகத்தின் தலைநகரான கண்டியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
 
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன¸வட மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன்¸கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளீதரன்¸மத்திய மாகாண மற்றும் வட மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.