கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு ஆரம்பம்

0
257

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.இதயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்ட இருபது மாணவர்களுக்கு கல்வி உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.