கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு.

0
495

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் ஆகியோர் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் 4மில்லியன் செலவில் குறித்த கட்டம் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.