வெல்லாவெளியில் விபத்து – ஒருவர் பலி

0
409

(பழுகாமம் நிருபர்) வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று(19) இரவு இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்தவர் தும்பங்கேணி கிராமத்தினைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கிருபையம்மா (வயது 70) என இனங்காணப்பட்டுள்ளது.

வீதியால் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவர், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.