குப்பைகள் அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவம்

0
129

அனுமதியற்ற மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகள் அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல் மற்றும் முறையான விதத்தில் குப்பைகளை சேகரிப்பதனை அவதானித்தல் போன்ற நடவடிக்கைகளில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, குப்பைகளை சேகரித்து எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும், முறையற்ற விதத்தில் குப்பைகளை காணப்படும் இடங்களை அவதானித்து அது தொடர்பான (நகரசபை / பிரதேச சபை) அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நடவடிகையில் ஈடுபடுவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் குறித்த விதிகளை மீறுவோரை கைது செய்ய காவல்துறையினருக்கு இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.