மதுரங்கேணிக்குளம் மாணவர்களுக்கு  புத்தகப்பைகள் வினியோகம்

0
194

கற்குடா கல்வி வலயத்தில் உள்ள மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள மிகவும் வறிய மாணவர்கள் 45 பேருக்கான புத்தகப்பைகள் அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜாவினால் பாடசாலையில் வைத்து அப்பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

கையளிப்பின்போது அன்று பாடசாலைக்கு சமூகமளித்திருந்த வறிய மாணவர்கள் 25 பேருக்கு அஹிம்சா நிறுவனத்தின் தலைவர் விஜயராஜா, ஆலோசகர் வசந்தராஜா, பாடசாலை அதிபர் மங்களரூபன் ஆகியோரினால் புத்தப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.