விருந்து சிற்றிதழின் மூன்றாவது இதழ் வெளியீட்டு விழா

0
618
பாண்டிருப்பை சேர்ந்த ஊடகவியலாளர் செ.துசியந்தனை அவர்களை ஆசிரியர்களாக  கொண்டு அகரம் அமைப்பினால் வெளியீடப்படும் விருந்து சிற்றிதழின் மூன்றாவது இதழ் வெளியீட்டு விழா (17.6.2017)   சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் கல்முனை டிலானி றெஸ்ட் இன் மண்டபத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களும்

சிறப்பதிதியாக மாணவ மீட்பு பேரவைத் தலைவர் எஸ்.கணேஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.   நூல் முதற் பிரதியை குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய பிரதி அதிபர் கு.பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டுரையினை  ஒய்வு நிலை அதிபர் கா.சந்திரலிங்கம் நிகழ்த்தினார். நூல் நயவுரையினை மகுடம் வி.மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.  இலக்கிய அதிதியாக மூத்தகவிஞர் மு.சடாட்சரன் அவர்களும், கௌரவ அதிதியாக குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் அவர்களும்,கலந்துகொண்டார்கள்.
வரவேற்புரையினை ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் நிகழ்த்தினார். ஏற்புரையினை விருந்து ஆசிரியர் அகரம் செ.துஜியந்தன் நிகழ்த்தினார்.
நூலின் சிறப்பு பிரதிகளை  முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கா.கணேஸ், சேவோ நிறுவன பணிப்பாளர் கே.சத்தியநாதன், களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலம் தலைவர் பி. குணசேகரன், சம்சுங் சிங்ககிரி முகாமையாளர் ரி.இளங்கோ, மனிதாபிமான அபிவிருத்தி தாபன பணிப்பாளர் கே.சாருகாஸ், பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.ஜெகநாத்,  கல்முனை-03 இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.வித்தியகாந்,  வின்னர் விளையாட்டுக் கழக தலைவர் கே.செல்வராஜ், ஊடகவியலாளர் கே.விஜயரெத்தினம், ஆசிரியர் ஆர். மோகப்பிரசன்னா, சுகா வீடியோ உரிமையாளர் ஆர்.ரகு ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.