இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரசதொழில் கிடைக்கும் வரை போராடுவோம்!

0
356
இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரச தொழில் கிடைக்கும்வரை போராடுவோம்.உங்களுக்காக நாம் குரலெழுப்புவோம்.இணையுங்கள்..
 
இவ்வாறு இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப்பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத்தலைவர் வண.தென்நே  ஞானானந்த தேரர் நேற்று திங்கட்கிழமை காரைதீவில் கடந்த 85நாட்களாக போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகளைச்சந்தித்து கலந்துரையாடுகையில் சூளுரைத்தார்.
 
கொழும்பிலிருந்து வருகைதந்த தலைவர் வண.ஞானனந்த தேரர் சிங்களத்தில்மட்டுமல்லாமல் தமிழிலும் பட்டதாரிகளுடன் மிகவும் அந்நியோன்யமாக சிரித்துப்பழகி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
 
அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில்;:
திருகோணமலையில் கடந்த மாதம் மாகாணசபைமுன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற ஆயைணை கிழித்தெறிந்தமைக்காக உன்ரன திருமலை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை வந்துள்ளது. நாளை(இன்று) நான் நீதிமன்றுக்குச்செல்லவேண்டும். அதற்காக இன்று பகல் சட்டத்தரணிகள் சங்கத்தினரைச்சந்திக்கவேண்டும்.
 
அதனிடையே அம்பாறை மாவட்டத்திலுள்ள உங்களையும் சந்தித்துச்செல்லவே இங்கு வந்தேன். உங்களது பேராட்டம் 85 நாட்களைத்தாண்டி வெற்றிகரமாக செல்வதனையிட்டு பாராட்டுகின்றேன். மகிழ்ச்சியடைகின்றேன். எமது நம்பிக்கை வைராக்கியம் முக்கியம்.
இங்குமாத்திரமல்ல வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் இவ்வாறான வேலையில்லாப்பட்டதாரிகள் இருக்கின்றனர்.இதில் சாதிமத வேறுபாடு இல்லை.அனைவருக்குமாக நாம் குரலெழுப்புவோம்.சேர்ந்துபோராடுவோம்.
 
எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் ஒரு கூட்டம்உள்ளது.அதாவது நுண்கலைப்பட்டதாரிகளுக்கான கூட்டமது. எனவே இங்கிருந்தும் இருவர் அதில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.
எமது போராட்டத்தின்பலனாக இதுவரை 85வீதமான பணிகள் முவெடைந்துள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் இன்னும் ஓரிருமாதத்தில் எமக்கு முழுமையான பச்சைக்கொடிக்காட்டலாம். எனவே நாம் தொடர்ந்து இறுதிவரை பேராடுவோம். என்றார்.