காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்

0
297

போர்க்குற்ற விசாரணைக்கான கதவு காணாமல்போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் திறக்கப்படும் என்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை அமுல்படுத்த தடையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  குற்றஞ்சாட்டியுள்ளார்..

எனினும் இந்த சட்டமூலத்தை அமுலுக்கு கொண்டுவர  ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்று 71 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்    இன்று நேரடியாக சந்தித்துள்ளார்.

தாயகப்பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும்வகையில்  முள்ளிவாக்காலில்   ஏற்பாடுசெய்யப்பட்ட  அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின்  துன்பங்களை நேரடியாக  கேட்டறிந்தார்.

 

ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் நேரடியாக கையளித்த தமது  பிள்ளைகளையே தாம் கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்   தெரிவித்தனர்