முள்ளிவாய்காலில் சோகம்! விபத்தில் 7 வயது சிறுவன் பலி

0
205

முள்ளிவாய்காலில் இன்று பிற்ப்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக வருகைதந்தவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் முன்னால் வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை  பின்னால் வருகைதந்த கப் ரக வாகனம் சிறுவனில் மோதியதாகவும் காயமடைந்த சிறுவன் மான்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

விபத்தில் கொல்லப்பட்ட சிறுவன் பரனாட்டகல் ஓமந்தை வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் வயது 7 என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை முல்லைதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்