ஆரையம்பதி ஆலயங்களில் கொள்ளை

0
1064

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள இந்து ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு, பெறுமதியான குத்துவிக்குகள் உட்பட விலையுயர்ந்த பொருட்களும் நேற்று (12) கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்..

 

ஆரையம்பதி, செங்குந்தர் வீதி திருநீலகண்ட விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு, பெரிய குத்துவிளக்குகள் இரண்டு உட்பட ஏழு குத்துவிளக்குகள் மற்றும் தொங்கு விளக்கு என்பன கொள்ளையர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 3 இலட்சம் ரூபாய் என, ஆலயத்தின் பொருளாளர் சா.மணிசேகரன் தெரிவித்தார்.

 

அத்துடன், ஆரையம்பதி பேச்சியம்மன் கோயில் வீதி ஸ்ரீ சித்தி விநாயர் எள்ளுச்சேனை பிள்ளையர் ஆயத்திலிருந்து நான்கு குத்து விளக்குகள் மற்றும் பெறுமதியான கிடாரம் உள்ளிட்ட பொருட்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் என, ஆலயத் தலைவர் எஸ். புஸ்பாகரன் தெரிவித்தார். இந்த இரு ஆலயங்களின் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.