நிந்தவூர் பிரதேசத்திலே தமிழர்களுக்கு சொந்தமான மயானத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் முஸ்லிம் சகோதரர்கள் மைதானம் அமைக்க முயற்சி

0
419

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திலே தமிழர்களுக்கு சொந்தமான மயானத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் முஸ்லிம் சகோதரர்கள் மைதானம்  அமைப்பதற்காக வேண்டி புதிதாக பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்..

அவர்கள் மேலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் கூறியதாவது.

நிந்தவூர் கடற்கரையை அண்டிய பிரதேசத்திலே 2 ஏக்கர் நிலப்பரப்புடைய காணியானது ஆரம்பகாலந்தொடக்கம் எங்களது மயாணத்திற்கொன உள்ளதாகவும் 2004ஆம் ஆண்டு இந்த மயானம் தொடர்பான பிரச்சனை வந்தபோது அங்குள்ள சகல ஆலயங்களினதும் நிருவாகிகள் இந்தக்காணி பிரச்சனை தொடர்பாக எழுத்து மூலம் பிரதேச செயலகத்திற்கும், பிரதேச சபைக்கும் அறிவித்திருந்ததாகவும் பின்னர் அது எந்த முடிவுமின்றி அப்படியே கைவிடப்பட்டதாகவும் இருந்து வந்தது.

பின்னர் 3 நாட்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் எங்களது மயானத்திற்கான காணியூடாக புதிதாக பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக உரிய இடங்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடடிவடிக்கையும் எடுக்காமல் வீதியினை செப்பனிடும் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக நிலமையினை அறிவதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இந்த இடத்திற்கு விஜயம் செய்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீதி புணரமைப்பு வேலைத்திட்டங்களை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கையில்.

இன்று இந்த நாட்டிலே தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு பொதுவான தீர்வுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் இவ்வாரான மனக்கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தி பிரிவினையை தூண்டுவதற்கு யாரும் முற்படக்கூடாது எனவும் இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்திருப்பதாகவும், கிழக்கு மாகாணத்திற்குரிய உள்ளுராட்சி ஆணையாளர், பிரதேச செயலகம், பிரதேசசபைக்கும் தெரியப்படுத்தி இருப்பதாகவும் மேலும் இன்று இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.