கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்

0
367

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (04) வியாழக்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய், முறையற்ற வகுப்புத் தடையை உடனே இல்லாமல்செய், சீசீரி கமராவை இல்லாமல் செய், மஹாபொல பேசரி சரியான நேரத்தில் வழங்கு திருட்டு உடன்படிக்கையை இல்லாமல் செய், மாணவர் ஒன்றியத்தை உடனடியாக பதிவு செய், விடுதிப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர். அதனையடுத்து நிருவாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிசிரீவி கெமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை. மாணவர்களுக்கான பட்டப்படிப்பு உரிய காலத்திற்குள் நிறைவு செய்யப்படாமல் வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார். குறித்த ஆர்ப்பாட்டத்தை சிங்கள மாணவர்கள் பெருமளவிலானவர்கள் பங்கேற்று நடாத்தியிருந்தனர். 

கடந்த காலங்களில் இருந்து கிழக்கு பல்கலைகழகத்தின் நிருவாக சீர்;கேடு தொடர்பாக தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் பாரியளவிலாளான ஆர்ப்பட்டங்களை காலம் காலமாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.