சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகளின் மே தினஊர்வலம்

0
455
இன்று (01.05.2017) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள், பல்வேறுநாட்டு விடுதலை அமைப்புகள் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) கலந்து சிறப்பித்திருந்தது..

இந்தவகையில் சுவிஸ்லாந்தில் நடைபெறுகின்ற மேதின ஊர்வலங்களில் கடந்த 34 வருடங்களாக தொடர்ச்சியாக கலந்து சிறப்பித்து வரும் “புளொட்” அமைப்பினர், இவ்வருடமும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை மேதின ஊர்வலமானது காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி ஹெல்வெட்த்தியா ப்லாத்சில் ஆரம்பித்து, Helvetiaplatz führt die Route über die Ankerstrasse – Gessnerbrücke  – Löwenplatz – Löwenstrasse – Bahnhofplatz – Bahnhofstrasse – Uraniabrücke – Limmatquai zum Sechseläutenplatz   பாதைகளுடாக சென்று நிறைவடைந்தது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரமாண்டமான கொடியினை முன்னே ஏந்திச்செல்ல தொடர்ந்து கழகத் தோழர்கள், ஆதரவாளர்களுடன், பெண்கள் குழந்தைகள் எனவும் பொதுமக்களும் கலந்து “புளொட்” மேதின ஊர்வலத்தை சிறப்பித்து இருந்தனர்.
இதேவேளை சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு அமைப்புக்களும் தங்கள் கொடிகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.plot-a plot-b plot-c plot-d plot-e