இலங்கை தமிழரசுக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் முறுகல் அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர் அடங்கிய குழு

0
683

TNAஇலங்கை தமி­ழ­ர­சுக் கட்சி மீதும் அதன் தலை­வர் மீதும் தொடர்ந்து அவ­தூறு பரப்­பும் வகை­யில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி முன்­னெ­டுக்­கும் செயற்­பாடு தொடர்­பில் ஆராய்ந்து கட்­சியின் உயர் பீடத்­துக்கு    அறிக்கை சமர்ப்­பிக்க தமி­ழ­ர­சுக் கட்­சி­யில் மூவர் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் மைய செயற்­கு­ழுக் கூட்­டம் நேற்­றைய தினம் மட்­டக்­க­ளப்­பில் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தி­லேயே மேற்­படி குழுவை நிய­மிக்­கும் தீர்­மா­னம் எட்­டப்­பட்டு மூவர் அடங்­கிய குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண அவைத் தலை­வர் சீ.வி.கே.சிவ­ஞா­னம் மாகாணசபைஉறுப்­பி­னர் சி.தண்­டா­யு­த­பாணி மற்­றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­நேசன் ஆகி­யோர் உள்­ள­டங்­கிய குழுவே இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இலங்கை தமி­ழ­ர­சுக் கட்சி தொடர்­பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யால் தெரி­விக்­கப்­பட்ட கருத்­து­கள் தொடர்­பில் இந்­தக் குழு­வி­னர் ஆராய்ந்து அது தொடர்­பான அறிக்­கையை கட்­சி­யின் உயர் பீடத்­துக்கு சமர்ப்­பிப்­பர். அதே­போன்று தமி­ழ­ர­சுக் கட்­சி­யில் இருந்து இடை நிறுத்­தப்­பட்ட இரு உறுப்­பி­னர்­க­ளான அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் போன்­றோ­ரின் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பி­லும் இந்­தக் குழு­வி­னர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­பர்’ என்று தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் நேற்­றைய கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.