மேதினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

0
410

mullaithivu-a நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 54   ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர்

ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டுவருகிறது

இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ளனர் தொழிலாளர்களின் உரிமைகளை கோரி இடம்பெறுகின்ற இந்த தினத்தில் தொழில் புரியும்   தமது உழைக்கும் வர்க்கமான கணவன் உறவுகளையே தொலைத்துள்ள நாம் என்ன உரிமைகளை கோருவது இவ்வாறு எமது உறவுகள் இல்லாது உழைத்து எமது குடும்பங்களை பார்க்க யாருமற்ற நிலையில் வாழ்வாதார ரீதியாக பல்வேறு துன்பங்களை சந்திக்கின்றோம் எமது உறவுகளை கோரி நாம் வீதியிலிறங்கி போராடிவருகின்றபோதும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லை

உழைக்கும் எமது உறவுகளற்ற நிலையில் எமக்கு எதுக்கு தொழிலாளர் தினம் யாருக்கு உரிமைகோரி  இந்த தினம் எனவே நாம் இதனை புறக்கணிக்கிறோம் நாளைய நாளை துக்கதினமாக அனுஸ்ரிக்கிறோம்

நாளைய தினத்தில் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் அனைவரும் எம்மைப்போன்று வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட எம்மை உழைத்து பார்க்கக் கூடிய அந்த தொளிலாலார்களின் நிலை என்ன மற்றும் தொழில் நிலங்கள் கோரி போராடுகின்ற மக்களுக்கு என்ன முடிவு என்ற விடயங்களை உள்ளடக்கி உங்களுடைய உரிமை போராட்டத்தை முன்னெடுக்குமாறும் கோரியுள்ளனர்