கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பாரம்பரியத்தினை பேணுவோம் சிக்கனம் காப்போம் விளையாட்டு நிகழ்வு

0
1078

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் பாரம்பரியத்தினை பேணுவோம் சிக்கனம் காப்போம் எனும் தொனிப்பொருளில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன..

இங்கு, வழுக்குமரம் ஏறுதல், தலையணைச்சமர், கண்கட்டி முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், தோடம்பழம் மாற்றுதல், கண்கட்டி தயிர்சாப்பிடுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற்றன.

இதில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் பி.குணரெத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.