சிவராம் உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.

0
336

sampanthar-a (க.விஜயரெத்தினம்)

சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார். என்று இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியசின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்..

படுகொலை செய்யபப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தருமரெட்ணம் சிவராமின் பன்னிரெண்டாவது நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுரேற்றி வைத்து பேசுகையில் மேலுள்ளவாறு தெரிவித்தார். சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்று(29.4.2017) சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் வாலசிங்கம்- கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அவர் தொடர்ந்து பேசுகையில்:-

நாட்டின் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் உண்மைகள் வெளிக்கொனரப்பட வேண்டும்

சிவராம் பல விடயங்களைப்பற்றி அவர் எழுதியிருந்தபோது அவருடைய சிந்தனையுடைய கூர்மையை அன்று எழுத்துக்களால் காட்டினார்.அவரின் எழுத்தின் கூர்மையை அவரால் எழுதப்பட்ட கட்டுரையால் எல்லோரும் அவதானித்தார்கள்.அதை எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள்.சிவராமின் எழுத்துத்திறமையை பல பெரியார்கள்,புத்திஜீவிகள் புகழ்ந்து பேசியதை நான் காதால் கேட்டிருக்கின்றேன்.

அவருடன் தனிப்பட்ட ரீதியில் பேசும் போதும்,கருத்துக்களை, சிந்தனையை பரிமாறிக் கொள்ளும் போது அவர் சொல்லுகின்ற கருத்துக்களிலிருந்து,அவருடைய சிந்தனையுடைய ஆழம்,அழுத்தம், அதனுடைய சரிவு எல்லாம் புலப்படும்.சிவராம் சாதாரண மனிதரல்ல.அவர் திறமைசாலி ஆவார்.அவர் உயிரோடு இருந்திருந்தால் ஊடகத்துறையில் பெரியதொரு இடத்தைப் பிடித்திருப்பார்.

அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.நாங்கள்,எங்கள் சமுதாயம் பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றது.சிவராம்,நடேசன்,சுகிர்தராஜன் போன்றவர்களை இழந்திருக்கின்றது.பல்வேறு காரணங்களின் நிமித்தம் சமூகம் சம்பந்தமாக சமூகத்தில் பிரபல சம்பவங்கள் நிகழ்ந்தபோது அச்சம்பவங்களை வெளிக் கொண்டு வருவதற்காக,அச்சம்பவங்களின் உண்மைகளை மறைக்காமல் இருப்பதற்காக அவர் பல உண்மைகளை எழுதியதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது அக்கொலைச் சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பல முயற்ச்சிகள் நடைபெற்றது.அம்மாணவர்கள் தன்வசம் வைத்திருந்த குண்டுகளின் நிமித்தம் கொலை செய்யப்பட்டார்கள் எனும் சம்பவத்தை மாற்றியமைக்க முனைந்தார்கள்.அப்பாவி மாணவர்களை சுட்டுக்கொன்ற விடயங்கள் பத்திரிகைமூலம் வெளிக்கொண்டு வந்தார்கள்.இதன் நிமித்தம் சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டார்.சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் அறியப்படவில்லை.உண்மைகள் அறியப்பட வேண்டியதுதான் என்று நான் அவசியமாக நினைக்கின்றேன்.ஏன்னென்றால் பல்வேறு விதமான திறமையான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருந்தபோது அவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டிருந்தார்…? எதற்காக கொலை செய்தார்கள் …? அந்த கருமங்கள் வெளிவர வேண்டியது சமூகத்தில் உள்ள அத்தியாவசியமான தேவையாகும் என்று நான் கருதுகின்றேன்.இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் இந்தநாட்டில் இடம்பெறக்கூடாது.ஏன்னென்றால் இவ்வாறான ஊடகவியலாளர்களின் கொலையில் நடைபெற்ற  நிகழ்வுகளின் உண்மைத்தன்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்று கருதுகின்றேன்.

லசந்த விக்கிரமசிங்க கொலை செய்யப்பட்டார்.எக்னியக்கொட காணாமல் ஆக்கப்பட்டார்.இச்சம்பவங்களின் விசாரணைகள் இன்று நடைபெறுகின்றது.உண்மையான முயற்ச்சிகள் நடைபெறுகின்றது.அவர்களின் பிரேதங்கள் தோண்டியேடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.சில புது முடிவுகளுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.ஒரு காலகட்டத்தில் இந்தநாட்டில் யாரும் சுதந்திரமாக சிந்திக்கவில்லை.சுதந்திரமாக செயற்பட முடியாது.சுதந்திரமாக எழுத முடியாத நிலமை இருந்தது.இன்று அந்த நிலமை மாறியிருக்கின்றது.ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம்.சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து வருகின்றோம்.பல விடயங்களை பல கோணங்களில் விடயங்களை ஆராய்ந்து அவருடைய எழுத்துக்கள் மூலமாக இவ்வூடகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.அந்தவகையில் சிவராமின் இறப்பு பெரும் இழப்பாக கருதுகின்றேன்.ஒரு நாட்டின் சமுதாயத்திற்கு ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்கள்.அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது,ஜனநாயகம் பலமாக இருப்பது,ஜனநாயகம் ஆட்சியில் அடிப்படையாக இருப்பது,ஒரு நாட்டின் செயற்படுகின்ற ஊடகவியலாளரின் சுதந்திரத்தில் தங்கியிருக்கின்றது.அவர்கள் உண்மையை எழுதவேண்டும்.உண்மையான விடயங்களை கூறவேண்டும்.உண்மை வெளிவரவேண்டும்.உண்மை சாதாரண மக்களுக்கு தெரியவேண்டும்.இவ்விதமாக தெரியபட்டால்தான் அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம்.அது உறுதியாக பாதுகாக்கப்படலாம்.ஆனால் ஊடகவியலாளர்கள் உங்களுடைய மூத்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினத்தை நாடாத்தி மரியாதை செலுத்தியுள்ளீர்கள்.

ஊடகவியலாளர்கள் பலமாக இருக்கவேண்டும்.ஊடகப்பணியை துணிவாக ஆற்றவேணும்.எம்மைப் பொருத்தமட்டில் ஊடகவியலாளர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றோம்.நீங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் எவ்விதமாக உதவலாமோ அவ்வாறு உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் பின்னிக்கமாட்டோம்.அதனை உறுதியாக கூறிவைக்கின்றோம்.ஊடகவியலாளர்களை பாராட்டுகின்றேன் என்று எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.