மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட சிவராமின் நினைவு தினம்.

0
664

படுகொலை செய்யப்பட்ட “மூத்த ஊடகவியலாளர்” “தர்மரெட்ணம் சிவராமின்” 12ஆவது சிரார்த்ததினம் இன்று(29.4.2017)  மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது..

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வாலசிங்கம் கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் பிற்பகல் 7.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில்

மலரஞ்சலி,இறைவணக்கம்,ஈகைச்சுடரேற்றுதல்,நினைவுரை,ஊடகத்துறையில் சிவராமின் பங்களிப்பு, அத்துடன் தமிழரசுக்கட்சியின் உருவாக்கத்தில் தராக்கியின் வகிபாகம் போன்ற உரைகளும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,ஜனாதிபதி சட்டத்தரணியும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,சீ.யோகஸ்வரன், ச.வியாளேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன்,பொன். செல்வராசா,கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார்- பிரசன்னா,மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,    இ.சாணக்கியன்  உட்பட பல ஊடகவியலாளர்களும்    கலந்து கொண்டார்கள்.jana-aasivaram-a sivaram-c sivaram-dsivaram-b sivaram-e sivaram-f sampanthar-asivaram-g