ஓட்டமாவடி மத்திய கல்லூரி சகாப்த விழாவை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

0
419

DSC_0026மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நுற்றாண்டினை முன்னிட்டு சகாப்த விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிராமய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் அகிலவிராஜா காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன், மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் ஒன்ரின் பெணார்டோ, முதலமைச்சர் நாஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மூப்பது மில்லியன் ரூபா பெறுமதில் அமைக்கப்பட்ட பாடசாலை நிருவாக கட்டம் திறந்துவைக்கப்பட்டதுடன், முப்படையினரின் கண்காட்சி, மாணவர்களின் புத்தாகங்கள் காட்சிப்படுத்தல், தொழில்நுட்பவியல் கண்காட்சி சாகச விளையாட்டு என்பன நடைபெற்றன.

DSC_0024 DSC_0028 DSC_0030 DSC_0034