செங்கலடியில் மதிலும் சரிந்தது, கட்டப்பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கையும் சரிந்தது முடிவு – சிறுமி பலி!

0
863

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை (29) பகல் நடந்த இச்சம்பவத்தில், படமாளிகை வீதியைச் சேர்ந்த சண்முகராசா ஷாறுக்கா (வயது 7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்..

சிறுமியும் அவரது சகோதரனும் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த மதில் கடந்த 4 நாட்களுக்கு முன்னரேதான் கட்டி முடிக்கப்பட்டது என்று வீட்டுரிமையார்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சிறுமியை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்துவிட்டாரென, வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார், விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டப்பொருட்களின் கலப்படத்தையும், கட்டடம் கட்டும் மேசன் தொழிலாளர் தரத்தையும், குழந்தை மீது பெற்றோர் கவனயீன்மையும் ஒரே நேரத்தில் யோசிக்க வேண்டியதும் வேதனைப்படுமளவு இன்று காலை கடந்தவாரம் கட்டப்பட்ட சுவர் சரிந்து சிறுமியின் உயிரை எடுத்துவிட்டது.chenkalady-a chenkalady-b