கல்குடா மதுபான உற்பத்தி தொழில்சாலையை நிறுத்தக்கோரி இரண்டாவது தடவை திறண்ட சித்தாண்டி ஊர் மக்கள்

0
498

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும், குறித்த இடத்தில் தாக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணை இடம்பெறக்கோரியும் நேற்று (28) வெள்ளிக்கிழமை சித்தாண்டியில் இரண்டாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது..

மயிலத்தமடு மற்றும் மாதவணை கால்நடைப் பண்ணையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கால்நடை வளப்பாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள் சங்க செயலாளர், மார்ச் மாதம் 21ம் திகதி கல்குடாவில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்பான்மை சமூகத்தின் செல்வந்தர் ஒருவரினால் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதுபான உற்பத்தி தொழில்சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன் இருவரும் குறித்த மதுபான உற்பத்திச் தொழில்சாலையில் வேலைசெய்யும் குண்டர்கள் குழுகளினால் தாக்கப்பட்டமை தொடர்பாகவும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கின்றதான சனத் தொகைக்கு ஏற்ப 20க்கு குறைவான மதுபான விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு தமிழ் மக்களை போதையினால் அழித்து வாழ்வாதாரத்தை சீருழிப்பதற்கான தற்போது பல மடங்காக அதிகரித்து 58 மது விற்பளை நிலையங்கள் மாவட்டத்தில் உள்ளது.

இவ்வாறான நிலைமையை கொண்டுவர இடமளித்தது மாவட்டத்தின் நிருவாகம் உட்பட, அரசியல் தலைமைகள், இவ்வாறான நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணை இடம்பெற வேண்டும், தாக்குதல் தாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

மயிலத்தமடு மாதவணைப் பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக பண்ணையாளர்களாகிய நாங்கள் பெரும்பான்மை சமூகத்தினரால் எல்லையில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து கொண்டு வருகின்றோம், மட்டக்களப்பு எல்லைப் பகுதியான மயிலத்தமடு, மாதவணை மேச்சல் தரைப் பிரச்சினையை ஊடகங்கள் வாயிலாக முதலில் வெளிக்கொணர்ந்தவர்கள் இந்த மட்டக்களப்பு ஊடவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் பண்ணையாளர்களின் பிரச்சினையை பல்வேறு மட்டங்களுக்கும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்திய நிலையில் இன்றைய நிலையில் பண்ணையாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியது ஒட்டுமொத்த பண்ணையாளர்களின் கடமையென கருதுகின்றோம்.

ஒரு ஊடகவியலாளானுக்கு நாட்டில் இவ்வாறான நிலையென்றால் ஒரு சாதாரண நபருக்கு எவ்வாறு சுதந்திரம் வழங்கப்படப்போகிறது என்பது இந்த நால்லட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியின் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதானது, ஆட்சியாளர்களுக்கு ஒரு நல்லதொரு ஆரோக்கியமான நிருவாகமாக அமையாது.

இதேவேளை சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், சர்வ மத தலைவர்கள் என பலர் குறித்த தொழில்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற இவ்வேளையில் மட்டக்களப்பிலுள்ள புத்தி ஜீவிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மதுபானசாலைக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு திரியும் அவ்வாறனவர்களிடம் பண்ணையாளர்கள் சார்பான முதலில் கேட்டுக் கொள்வது, நீங்கள் படித்த புத்தி ஜீவகள் என்றால் மயிலத்தமடு மாதவணைப் பகுதிக்கு வாருங்கள் உங்களின் புத்தியை அங்கு காட்டுங்கள் என தெரிவித்தார்.

மயிலத்தமடு, மாதவணைப் பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் மற்றும் பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் மதுபான உற்பத்தி தொழில்சாலையை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்குள்ளன ஊடவியலாளர்களுக்கு நீதியான விசாரணை நடாத்தக்கோரியும் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் அமைக்கப்படும் மதுபானசாலை உற்பத்திச் தொழில்சாலை பகுதியில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு திரியும் ஒருவரின் சகோதரர் குண்டர் குழுக்களினால் தக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு மாவட்ட இரு ஊடகவியலாளர்களுக்கும் ஆதரவாக தாக்குதலுக்குரிய கண்டனத்தை தெரிவிக்கும் முகமாக சித்தாண்டியில் இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.sittandy-a sittandy-b