மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு தினம்!- எதிர்கட்சி தலைவர் கலந்துகொள்கின்றார்!

0
443

sivaram_aஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை (29) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது..
மட்டக்களப்பு ஊரணியில் உள்ள அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் நாளை மாலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளதுடன் விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார்.
மேலும் குறித்த நிகழ்வில் மாவை.சேநாதிராஜா, கி.துரைராஜாசிங்கம், எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், ஊடக நண்பர்கள், பொது மக்கள் என பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நடைபெறும் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு அஞ்சலி நிகழ்வில், மாமனிதர் சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தல், அஞ்சலி சுடர் ஏற்றல், தலைமையுரை, மாமனிதர் சிவராமின் ஊடகச் பணி தொடர்பாகவும், அரசியல் சார்ந்த விடயம் தொடர்பான பிரதம விருந்தினர்களின் விசேட உரைகளும் இடம்பெறவுள்ளது.
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு தினத்தையொட்டி இடம்பெறும் நினைவுதினத்திற்கு அனைத்து ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.