இறக்காமம் மாயக்கல்லி மலைக்காணியை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பு பேரணியும் அமைதி ஊர்வலமும்

0
351

kalmunai-aaஇறக்காமம் மாயக்கல்லி மலைக்காணியை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பு பேரணியும் அமைதி ஊர்வலமும் இன்று வெள்ளிக்கிழமை பகல் தொழுகைக்கு பின்னர் கல்முனைக்குடி முகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில் இருந்து வருககைதந்தவர்கள் இவ்வார்பபாட்டத்தில் கலந்து கொண்டனர்..

இவ்வார்ப்பாட்டமானது இறக்காமம் மயக்கல்லி மலையில் பலவந்தமாக முஸ்லிங்களினது காணிகளை பேரினவாதிகள் அபகரித்து அங்கு பௌத்த விகரைகளை அமைப்பதற்கு எதிர இவ்வாரப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கைகளில் பதாதைகளையும் ஏந்திச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அங்கு வருகைதந்த கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளரிடம் மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

இறக்காமம் பிரதேசத்திலே முஸ்லிம், சிங்களம் ஆகிய இரண்டு இனங்களும் சந்தேசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இதனை சீர்குலைத்து அவர்களை மோத விட வேண்டும் என்பதற்காக சில பௌத்த இன தீய சக்திகள் அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றார்கள்.

மாயக்கல்லி மலையில் சில காலத்திற்கு முன்பு ஒரு பௌத்த சிலையை வைத்து இரண்டு இனங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த நினைக்கும் தீய சக்திளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கமும் அதில் உள்ள அரச உயரதிகாரிகளும் நிரந்தரத்தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் கூறினர்.

இங்கு இன்னுமொருவர் கருத்துக்கூறுகையில்

இந்த நல்லாட்சியில் சிறுபான்மை இனங்களாக இருந்து கொண்டிருக்கும் முஸ்லிம் தமிழ் இனங்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற இந்த சூழலில் இந்த பிரதேசத்தினை குழப்புவதற்காக பேரினவாத சக்திகள் பெரும்பான்மை இனம்  இறக்காமம் பிரதேசத்திலே ஒரு புத்த சிலையை நிறுவி முஸ்லிங்களுடைய தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதிக்கின்ற விதத்தில் நடந்து கொண்டிருப்பதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நல்லாட்சியை கொண்டுவந்த பெருமை இந்ந நாட்டிலே உள்ள சிறுபான்மை இனத்திற்கே சொந்தம் அன்று தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களித்ததன் பயனாகவே இந்த நாட்டில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அரியாசனம் ஏறியது அந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இதனை குழப்புவதற்காக இங்குள்ள சில பேரினவாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள் இதனை தடுத்து நிறுத்துவதற்காக அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.