சிறுபான்மையினரின் பிரச்சினைகளின் போது இரா சம்பந்தன் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம்

0
495

manikkamadu-aஅம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது..இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம் சந்திப்பில் மாணிக்கமடு மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் பல்வேறு சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் சிறுபான்மையினரின் காணிகளே உள்ளன எனவும் அவர்களின் காணி உறுதிகள் உட்பட ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் அது தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் அத்துடன் கிழக்கில் காணப்படும் சிறுபான்மையினரின் காணி ஆக்கிரமிப்புக்கள்,அத்துமீறல்கள் தொடர்பிலும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதன் போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா,சம்பந்தன் மற்றும் ஶஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மாணிக்க மடு தொடர்பில் ஜனாதிபதியிடம் பல அழுத்தமான கோரிக்கைகளை விடுத்துள்ளதுடன் எனவே இது தொடர்பில் ஜனாதிபதியினால் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக நம்பிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் கிழக்கின் ஆளுனர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இதன் போது அவர்களுக்கு ஜனாதிபதி பல சாதகமாக பணிப்புரைகளை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை சிறுபான்மையினரின் பிரச்சினைகளின் போது தமிழ் முஸ்லிம் தலைமைகளான எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம் எனவும் இவ்வாறான தருணங்கள் சிறுபான்மையின அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
சிறுபான்மையினருக்கான நலன்களுக்கு குந்தகம் ஏற்படுகின்ற போது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து குரல் கொடுப்பதன் ஊடாக பாரிய வெற்றிகளை எட்ட முடியுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

SLMC velicham