ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 4 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

0
190

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட    4 பேரின் விளக்கமறியல்   நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொள்ள   சென்றபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவர்களை எதிர்வரும் மே  மாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.