இராணுவ தளபதியாக சரத் பொன்சேகாவை நியமிக்க போவதில்லை – மஹிந்த அமரவீர

0
217

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாகவோ அல்லது அனைத்து படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் செய்திகள் வெளியானது போன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாகவோ அல்லது அனைத்து படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை.

அவ்வாறான பதவியை சரத் பொன்சேகா கேட்கவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்த உதவ முடியுமா என்று தான் ஜனாதிபதி, சரத் பொன்சேகாவிடம் கேட்டதாகவும் அதற்கு சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.