நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

0
266

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை கிழித்தெறியப்பட்டமைக்கு  எதிராக  மாவட்ட சட்டத்தரணிகள்   திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் 76 ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாகாண சபைக்கு முன்னாலுள்ள பிரதான வீதியை வழிமறித்து  கடந்த 25 ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, போராட்டத்தை அமைதியான முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா இடக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால உத்தரவின் பிரதியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் கிளித்தெறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இன்று இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது .