மே தினக் கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0
429

எதிர்வரும் மே தினத்தில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்களும் இணைந்து கொழும்பிலும், கண்டியிலும் 16 மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக கொழும்பிலும், கண்டியிலும் 7 ஆயிரத்து 600ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனால், நாடு முழுவதும் 30ஆம் திகதி இரவு முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன..