வெங்காயத்தனமான விளக்கமில்லாத விடயங்களுக்கு நாங்கள் சென்று விளக்கங்களை கேட்கவேண்டிய அவசியமில்லை.

0
1723

viyalendran-aa      கல்குடா பகுதியில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பணம் படைத்தவர் ஒருவரினால் பாரிய அளவில் அமைக்கப்படும் எரிசாரய உற்பத்தி தொhழில்சாலைக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக முளைத்த புத்தி ஜீவிகள் என தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு திரியும் நபர்கள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தி ஜீவிகள் என தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு திரிகின்றவர்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் கருத்துதெரிவிக்கையில்

மட்டக்களப்பு பட்டதாரிகள் இரண்டு மாதம் கடந்த நிலையில் வீதியோரங்களில், வாழைச்சேனை ஆகித ஆலையைத் திறந்து 3500க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்ககோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருந்தோம், வடக்கு கிழக்கு பகுதிகள் எங்கும் பல நில காணி விடுதலைக்கான போராட்டங்கள் நடாத்தியிருந்தோம், இலங்கை இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆர்ப்பாட்டங்கள் ஆனால் தென்னிலங்கையிலுள்ள பணம் படைத்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நிலம் மற்றும் வளத்தை வழங்கி தமிழர்களின் நிலங்களை கூறுபோடுவதற்கு சில ஐக்கி தேசிய கட்சி உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு எரிசாரய உற்பத்தி தொழில்சாலையை கொண்டு வந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களை கல்விமான்களாக காட்டிக் கொண்டு திரியும் சிலர் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் வலைக்குள் உட்பட்டு விட்டார்களோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

யார் இந்த புத்தி ஜீவிகள் என்ற கேள்வி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது, மாட்டத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள், தேவைகள் இருக்கின்றபோதும் மக்களையும் மாவட்டத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கும் எரி சாராய உற்பத்திச் தொழில் சாலைக்கு மாத்திரம் இந்த புத்தி ஜீவகள் எங்கிருந்து வந்தார்கள், யாருடைய தேவைக்காக இவர்களின் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களை புத்தி ஜீவிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு திரியும் சிலரின் வெங்காயத்தனமான விளக்கமில்லாத விடயங்களுக்கு நாங்கள் சென்று விளக்கங்களை கேட்கவேண்டிய அவசியமில்லை.

நாங்கள் தொடர்ந்து சொல்லுகின்றோம், கல்குடா பகுதியிலுள்ள எரி சாராய உற்பத்திச் தொழில்சாலை அகற்றப்பட வேண்டும் என்ற கொள்ளையில் உறுதியாக இருக்கின்றோம்.

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மறைமுகமாக பெரும்பான்மை சமூகத்தின் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான எரிசாரய உற்பத்திச் தொழில்சாலையை அகற்றவேண்டும் என தெரிவித்தார்.