கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் கட்டியம் கூறிய ஹர்த்தால்

0
6190

18058146_418691138502647_457297253952216409_n (வேதாந்தி)

தமிழர்கள் இனிமேல் சிங்கள மக்கயையும் அவைணைத்தே தமது அறவழிப்போராட்டங்களை கிழக்கில் முன்னெடுக்கு வேண்டுமென்பதை நேற்றைய ஹர்த்தால்   உணர்த்தி நிற்கின்றது. நேற்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்தும்  முஸ்லிம் மக்களிடமிருந்து கிழக்கில் எதுவித ஆதரவும் வழங்கவில்லையென்பதை தமிழ் தரப்பினர் கவலையுடன் வெளியிட்டுள்ளனர்.

தெரிவிப்பது தலைவர்கள் முடிவெடுப்பது நாங்களே என்பதை நேற்றைய நிகழ்வின் ஊடாக முஸ்லிம் மக்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

சமுக ஊடகங்களில் இச்சம்பவமே பேசும் பொருளாக பேசப்பட்டுவருகின்றது. முஸ்லிம் மக்கள் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்நபோதிலும் நேற்றைய சம்பவம் முகத்தில் அறைந்தால் போல் உள்ளதாகவே தென்படுகின்றது.

தாங்கள் ஆதரவளிக்காமைக்கான பல் வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பல கருத்துக்கள் பழையவிடயங்களை ஞாபகப்படுத்தி இனத்துவேசத்தை வளர்ப்பதாகவே முகப்புத்தகங்களில் பேசப்பட்டு வருகின்றது.

பழைய வரலாறுகள், நடவடிக்கைகளை கிண்டிக்கிளறுவதால் எந்தபயனும் கிடைக்கப்போவதில்லை. கடந்தகாலங்களில் எந்தவொரு சமுகமும் தாங்கள் தவறிழைக்வில்லையென்று மார் தட்டிக்கொள்ள முடியாது நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் மறப்போம் மன்னிப்போம் என்பதற்கமைய இனிமேல் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

 

தமிழ் பேசும் சமுகம் என்ற அடிப்படையில் இருசமுகங்களுக்கும் பல பொதுவான பிரச்சினைகள் உண்டு இதனை ஆளும் தரப்புக்கு வெளிக்காட்டவேண்டும் என்ற நோக்கிலேதான் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேராடுவதை தாம் விரும்பவில்லை என்பதை நேற்றைய  நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் மக்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

கடந்தகால வரலாறுகளை மீடடிப்பார்த்தோமானால் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்த சம்பவங்கள் குறைவாகவே  காணப்படுகின்றது.

தமிழ்பேசும் சமுகம் என்ற அடிப்படையில் தந்தை செல்வாவிலிருந்து இன்று சம்பந்தன் வரை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த  வரலாறுகள் நிறையவே உண்டு.

 

நடைபெற்ற ஆயுத அகிம்சைப் போராட்டங்களை தமிழர்களும் சிங்கள மக்களும் அழிவுக்கு பயன்படுத்த முஸ்லிம் மக்கள் தங்கள் ஆக்கத்திற்கே பயன்படுத்திவருகின்றனர்.

உலகில் எல்லா இன மக்களும் வாழ்வதற்காக போராடுவார்கள் ஆனால் இலங்கையில் மட்டும் தமிழ் இனம் போராடுவதற்காகவே வாழ்கின்றார்கள் என அண்மையில் பாலன் தோழர் அவர்கள் பதிவொன்றிலல் குறிப்பிட்டிருந்தார். நாம் போராட பிறந்த சமுகம் என்ற நிலமையை மாற்றி அமைக்க இனிவரும் காலங்களில் எமது வியுகங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை அரசியல் தலைமைகள் ,இளைஞர்கள்,சமுக ஆர்வலர்கள்,ஆலயங்கள் , தேவாலயங்கள் முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இனிமேலும் நாம் தமிழ் பேசும் சமுகங்கள் என கூறிக்கொண்டு அவர்களும் எமது சகோதரர்களே அவர்களையும் அரவணைத்துக்கொண்டே எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற மனப்பாங்கிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில்  தமிழ் பௌத்த காலாசாரங்கள் மறைக்கப்படடு அழிக்கப்பட்டு கடல் கடந்த அரபு கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தி அதனை நம்மவர் மத்தியில் திணிக்கும் முயற்சிகளே தற்போது நடைபெற்று வருகின்றது.

நாங்கள் மொழியால் மட்டுமே ஒற்றுமைப்பட்டுள்ளோம் எங்கள் கலை கலாசார பண்பாடுகள் வித்தியாசமானவை எனக்கூறும் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து வாழ நினைக்கும் தமிழ் சமுகம் ஏன் கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டுமுறைகள் சமயத்தினால் ஒன்று பட்டுக்காணப்படும் சிங்கள மக்களை கிழக்கில் ஏன் அரவணைத்து வாழக்கூடாது என்ற கேள்வி நேற்றைய சம்பவத்தின் ஊடாக எனது மனதில் பட்டுள்ளது.

தனிமாகாணம்,தனித்தலைமை,தனிமாவட்டம் மாகாணத்தில் யாரும் வாழலாம் நாம் மட்டுமே ஆளவேண்டும் என்ற அறபிய தேசத்து எண்ணத்தை கிழக்கில் திணிக்க முயலும் தலைவர்களுடன் இன்னும் இணைந்து செல்ல வேண்டுமா என்பதை தமிழ் தலைவர்களும்,இளைஞர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் இது இனவாத கருத்தல்ல.

தமிழ்ர்கள் போராடப்பிறந்தவர்கள் அல்ல என்ற சிந்தனையை மாற்றியமைத்து தமிழர்களும் இந்நாட்டில் வாழவேண்டும்,அவர்களும் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை முதலில் கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் மனதில் பதிய வைப்போம் கிழக்கில் சிங்கள மக்களுடன் கைகோர்ப்பம் எதிர்கால திட்டங்களை தீட்டுவோம்.

இதற்கு அரசியல் தலைவர்கள் முன்வராவிட்டால் இளைஞர்கள் இந்தப்பாரிய பணியை கையில் எடுத்து கிழக்கில் உள்ள சிங்கள மக்களை அரவணைக்க முயற்சிக்க வேண்டும்.  என்னதான் நியாயங்கள் சொன்னாலும்

கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் என்பதையே நேற்யை ஹர்த்தால் கட்டியம் கூறி நிற்கின்றது..