அடுத்த மாத இறுதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்

0
602

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

தற்போது, இது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார்.  புதிய கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நடவடிக்கை இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்பொருட்டு 71,111 பேர் வரை விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது..